|
|
தொடர்புகளுக்கு:
udhaydharshans@gmail.com
whatsapp: shaanuday (+447910926031)
www.subhashini.org
வணக்கம்
உலகம் வாழ் இலங்கை தமிழர் திரையோவியங்களை ஒரு தளம் சேர்க்கும் ஒரு பெரும் முயற்சி இது.
இன்றைய தேதியில் இலங்கையிலும் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழர்களும் உலகம் முழுதும் படர்ந்து சென்று அங்கங்கே அவர்கள் தயாரித்து வெளியிட்ட திரைப்படங்கள் எண்ணிலடங்கா. இருப்பினும் அவை உலக அரங்கில் எங்கள் தமிழர்களுக்கிடையிலும் கூட போய்ச்சேரவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயம். பேசப்படவேண்டிய பல படைப்பாளிகளும் அவர்களின் படைப்புகளும் ஒருசில பிராந்தியங்களில் மாத்திரம் வெளிக்கொணரப்பட்டு பின் முடங்கிப்போயின. எந்த வித லாபமும் இன்றி கடல் கடந்து போன சில படங்கள் கூட ஓரிரு காட்சிகளுடனும் ஒரு சில வாரங்கள் பேசப்பட்டதுடன் மீண்டும் பெட்டிக்குள் அடங்கிப்போயின. அது ரசிகனின் தவறும் அல்ல படைப்பாளிகளின் தவறும் அல்ல. படைப்புகள் பற்றிய தகவல்கள் இன்றைய காலத்தில் வெகுவாக பரவக்கூடிய நிலையிலும் இவை பற்றி பேசக்கூடிய தகவல் மையங்கள் இல்லாமால் போனது ஒரு துரதிஷ்டமான காரணம். அந்த இடைவெளியை இந்த தளம் பெருமளவில் நிரப்பும்.
இந்த தளம் ஊடாக எங்கள் கலைஞர்களையும் அவர்களின் படைப்புகளையும் காலம் கடந்தும் தூரம் கடந்தும் எடுத்துச்செல்வதே எமது நோக்கம். ஒரு திரைப்படம் வெளியிடும் நாள்முதல் பின் பல வருடங்கள் அது பேசப்படவேண்டும் என்பது எங்கள் விருப்பம். இத்தளம் படைப்பாளிகளை ஒன்று சேர்க்கும் என்ற நிலைப்பாடும் உண்டு. எந்த வித பாகுபாடுமின்றி இத்தளம் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழர்களின் படைப்புகளை சேர்த்துக்கொள்ளும்.
தயவாகி உங்கள் படைப்புகளின் தகவல்களை தந்து இத்தளத்தை தளிர்க்கச்செய்யவும்.
நன்றி
ஷான் உதே |
|
|