ஈழவர் சினிமா
Eezhavar Cinema
     
ஒற்றை பனை மரம்

Ottrai Panai Maram
Related Videos

Related Links
None Yet
Photoes
No Images Added Yet
ஒற்றை பனை மரம்
Ottrai Panai Maram
United Kingdom • 2018 • 103 Minutes<
2018
விவரம் | Synopsis
இலங்கையில் 2009 மே 18 அன்று முடிவுக்கு வந்த தமிழர்களுக்கான தனி அரசு கோரி 30 ஆண்டுகள் நடைபெற்ற ஆயுதப் போராட்ட பின்னணியில் அமைந்துள்ளது இத்திரைப்படம். முன்னெப்போதும் இல்லாத அளவிலான அழிவையும் உயிர்ச்சேதத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

இப்போரில் ஒன்றரை இலட்சம் அளவில் மக்கள் உயிரிழந்தனர், தமிழர்களின் நகரங்கள் இடிபாடுகளாகின, குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டன; இலங்கையின் கொடூரமான இராணுவ நடவடிக்கை சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தி, சுமார் ஐந்து லட்சம் தமிழர்களை வன்னியில் உள்ள சுகாதாரமற்ற அகதி முகாம்களுக்குள் தள்ளியது. அதே வேளையில், தெற்கே உள்ள சிங்களப் பகுதியில் அரசாங்கம் வெற்றி விழாவைக் கொண்டாடியது.

இந்தப் படம் போரினால் உருவாக்கப்பட்ட மூன்று உயிர்களின் வேதனையான பயணங்களின் ஊடாக பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது.

கொடுமையான போரில் கர்ப்பிணி மனைவியை இழந்த சுந்தரம், போராளியான கணவனை இழந்த கஸ்தூரி மற்றும் பயங்கரமான வான்வழித் தாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்த 16 வயது சிறுமி ஆகியோர் அரசு 'மறுவாழ்வு மற்றும் நல்வாழ்வு முகாம்கள்' என்று பெயரிட்டிருந்தாலும் உண்மையில் சொல்லொணாத் துயரம் நிறைந்த அகதி முகாம்களில் வாழ்ந்து, இறுதியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பிய நிலையில் ஒரு குடும்பமாக ஒன்றிணைகிறார்கள்.

பின்கதை, அவர்களின் புதிய வாழ்க்கை எவ்வாறு தொடங்குகிறது, புதிய சூழலின் கசப்பான யதார்த்தம், தங்கள் சொந்த சமூகத்திலிருந்தே அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் தொடரும் அரச பயங்கரவாதம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது.

இது ஒரு முக்கியமான திரைப்படத்தை விட மேலானது; இது இலங்கையின் வரலாற்றில் உள்ள ஒரு மோசமான, அவமானகரமான பகுதியின் ஆவணப்பதிவாகும்.
Set against the backdrop of the 30 years of armed conflict for a separate state for Tamils in Sri Lanka, which ended on the 18th May 2009, the film is striking and spotlights the unprecedented destruction and loss of life.

As many as 146,000 dead, Tamil towns reduced to rubble, families torn apart, the brutal Sri Lankan military campaign caused untold hardship, pushing nearly half a million Tamils into squalid refugee camps in Wanni. At the same time, the government held victory celebrations in the southern Sinhala state.

This film takes audiences through the painful journeys of three lives shaped by the war.

Sundaram, who lost his pregnant wife in the brutal war, Kasthoori, who lost her husband, who is a freedom fighter, and a 16 year old girl whose entire family was killed in a horrific aerial bombardment happened to have gave in themselves as a family unit—having gone through an agonizing life in the horrific refugee camps which the government claiming, “Rehabilitation and Welfare camps”, and finally, after three years returning to their native villages.

It focuses on how their new lives begin, the grim reality of the new environment, the challenges that they have to face from their own community, and continuing state terrorism.

This is more than just an important film; it’s a documentation of an ugly and shameful part of Sri Lanka's history.
பிரிவு
Category
வகை
Genre
நீளம்
Duration
கலைத்திரைப்படம்போர் நினைவுக்குறிப்பு103 நிமிடங்கள்
Art FilmMemoir of War103 Minutes




பாடல்கள் | Songs
TitleLyricistSingers
 ஆதியையனே போதி புத்தனே
 Aathiyaiyane Bothi Buththane
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya

அஸ்வமித்ரா
Ashwamithra


விருதுகள் | Awards
வெளியீடு | Release
United Kingdom
August 2018

India
October 2024
விமர்சனங்கள் | Reviews


தயாரிப்பு நிறுவனம் Production Company
AAA Productions UK
தயாரிப்பாளர் Producer
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya
நடிகர்கள் Casts
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya

as Sundaram
நவயுகா குகராஜா
Navayuga Kugaraja

as Kasturi
அஜாதிகா புதியவன்
Ajathika Puthiyavan

as Ajathika
படக்குழு The Crew
கதை Story
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya
திரைக்கதை Screenplay
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya
வசனம் Dialogues
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya
இயக்கம் Direction
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya
உதவி இயக்கம் Asst Direction
இன்னும் பதியப்படவில்லை
Not Recorded Yet
ஒளிப்பதிவு Cinematography
மஹிந்த அபேசிங்ஹ
Mahinda Abesinche
ஒளிப்பதிவு Cinematography
ராஜ்குமார் CJ
Rajkumar CJ
படத்தொகுப்பு Editing
சுரேஷ் URS
Suresh URS

இசைக்குழு Music Group
இசை Composition
அஸ்வமித்ரா
Ashwamithra
வரிகள் Lyrics
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya
குரல் Vocal
அஸ்வமித்ரா
Ashwamithra